குடும்ப தகராறு மற்றும் கணவனின் ஏமாற்றத்தால் மனமுடைந்த இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம், மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பழுகாமம், மாவேற்குடா பகுதியைச் சேர்ந்த வேணுகரன் சுமேதா (வயது 22) என்ற இளம் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சம்பவம் தொடர்பாக....
கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்ட சுமேதா, தனது கணவருடன் வசித்து வந்துள்ளார்.
ஆரம்பத்தில் இவர்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நகர்ந்த போதிலும், கடந்த சில காலமாக அவரது கணவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் கடந்த (19.05.2026)ஆம் திகதி சுமேதாவிற்கு தெரியவந்துள்ளது.
இதனால் தம்பதியினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில், "நான் அவளையே மறுமணம் செய்து கொள்வேன்" என கணவர் சுமேதாவிடம் கூறியதாகத் தெரிகிறது.
முடிவில் நேர்ந்த சோகம்.
நம்பிக்கை துரோகத்தாலும், கணவனின் வார்த்தைகளாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சுமேதா, நேற்று முன்தினம் (20.05.2026) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து களுவாஞ்சிக்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.