மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல்!


​படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளரும், நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (31.05.2026)காலை  மட்டக்களப்பு காந்திப் பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியருகே உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது.


​மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியன இணைந்து இந்த நினைவஞ்சலி நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.



​மட்டு. ஊடக அமையம் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. 


இதன் போது, மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்திற்கு மட்டக்களப்பு மாநகர முதல்வர் (நகரபிதா) சிவம் பாக்கியநாதன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.கங்காதரன் ஆகியோர் இணைந்து மலர்மாலை அணிவித்து அஞ்சலியைத் தொடக்கி வைத்தனர்.

​அதனைத் தொடர்ந்து, நிகழ்வில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி, மலர்தூவி தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.


நிகழ்வின் போது​ மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் 

​ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் , மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன்,சமூக செயற்பாட்டாளர் க.செல்வேந்திரன்,

​மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தின் முன்னணி ஊடகவியலாளர்கள்.

இந்நிகழ்வின் போது நாட்டுப்பற்றாளர் ஐ.நடேசனின் துணிச்சலான ஊடகப் பணிகள் மற்றும் சமூகம் சார்ந்த பங்களிப்புகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத் தலைவர் வா.கிருஷ்ணகுமார் ஆகியோர் நினைவு கூர்ந்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.

புதியது பழையவை