யாழ். போதனா வைத்தியசாலையில் பாரிய தீ விபத்து - பல கோடி பெறுமதியான மருந்துகள் எரிந்து சாம்பல்!

​யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதான மருந்துக் களஞ்சியசாலையில் இன்று (09.05.2026)அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் பல கோடி ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன.

​சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது.

​இன்று சனிக்கிழமை அதிகாலை வேளையில், வைத்தியசாலை வளாகத்திலுள்ள மருந்துக் களஞ்சியப் பகுதியில் இருந்து கரும்புகை எழுவதைக் கண்ட ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புப் பிரிவினருக்குத் தகவல் வழங்கினர். யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் இணைந்து பல மணிநேரப் போராட்டத்தின் மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
புதியது பழையவை