மட்டக்களப்பு நகரில் தனியார் வங்கியில் திடீர் தீ விபத்து.!

​மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் இன்று (30.05.2026) காலை திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

​இவ்விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, துரிதமாக செயற்பட்டு தீயை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீயணைப்பு படையினரின் உடனடி நடவடிக்கை காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

​இத்தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள சொத்துச் சேத விபரங்கள் மற்றும் விபத்துக்கான பிரதான காரணம் என்பன இதுவரை கண்டறியப்படவில்லை. 

இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள்.
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை