நீதிமன்ற ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் கைது.!

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஆண் ஊழியரும் பெண் ஊழியரும் , வெள்ளிக்கிழமை (29.05.2026) கைது செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்ற வழக்கேடு ஒன்று காணாமற்போன சம்பவம் தொடர்பில் இருவரும் கைதாகியுள்ளனர்.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளரால் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் எடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆண் ஊழியரின் வீட்டிலிருந்த வழக்கேடு
காணாமற்போனதாகக் கூறப்படும் வழக்கேடு, கைது செய்யப்பட்ட ஆண் ஊழியரின் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூன் 1) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுச் சொத்துக்களை களவாடியமை, பொது சொத்துக்களை சட்டவிரோதமாக உடமையில் வைத்திருந்தமை மற்றும் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதியது பழையவை