அம்பாறையில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வாகன வரிசை காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது. அந்தவகையில் சில பகுதிகளில் நேற்று (14.05.2026) இரவு மீண்டும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதாக கூறப்படுகின்றது
தற்போது எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எரிபொருள் நிலைய உரிமையாளர்களே திட்டமிட்டு மீள வாகன வரிசையை ஏற்படுத்தியுள்ளனர் என மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சிலர் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி மீண்டும் எரிபொருள் நிலையங்களில் வாகனங்கள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
அதேசமயம் சில எரிபொருள் நிலையங்களில் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாக எவ்வித தடையுமின்றி விநியோகிக்கப்படுகிறதாகவும் குறிப்பிடபப்டுகின்றது.