மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின் பெரியகல்லாறு பகுதியில் இன்று (29.05.2026) பிற்பகல் வேளையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரு சிறுகுழந்தை உட்பட நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு கல்முனை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சாம்பல் நிற கார் ஒன்று, பெரியகல்லாறு பகுதியை கடந்தபோது திடீரென வீதியை விட்டு விலகி, அருகில் இருந்த மின்கம்பம் ஒன்றின் மீது மிக பலமாக மோதியுள்ளது.
மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி (Engine Area) முற்றாக நசுங்கியுள்ளதுடன், முன் பக்க கண்ணாடியும் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து நடந்தவுடன் காரில் இருந்தவர்களை மீட்ட பிரதேச மக்கள், அவர்களை சிகிச்சைக்காக உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
காரின் உள்ளே ஆடைகள் மற்றும் பயணப் பொதிகள் சிதறிக்காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
விபத்துக்கான காரணம்
மதிய வேளையில் காரை செலுத்தி வந்த ஓட்டுநருக்கு ஏற்பட்ட திடீர் நித்திரைத் தூக்கம் (அயர்வு) காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.