எம் கே.சிவாஜிலிங்கம் அவர்களுக்கு பெருந்தொகை நன்கொடை வழங்கினார் ஜனாதிபதி சட்டத்தரணி கே வி தவராசா.!

யாழ்மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய பற்றாளருமான எம் கே சிவாஜிலிங்கம் அவர்களின் உடல் நிலை சிகிச்சையான சிறுநீரக மாற்றுச்சிகிகிச்சைக்காக ரூபா 70, இலட்சம் தேவை எனவும் விரும்பியவர்கள் அன்பளிப்பு செய்யுமாறும் சிவாஜிலிங்கம் அண்ணர் சமூக வலைத்தளங்கள் மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை கருத்தில் எடுத்து ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழத்தேசிய கொள்கை பற்றாளருமான எமது மதிப்புக்குரிய கே.வி. தவராசா அவர்களின் கவனத்திற்கு இன்று காலையில் இதனை தெரியப்படுத்தினேன்.

அதனை மனப்பூர்வமாக ஏற்று “கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளை” ஊடாக உடனடியாக இன்று(22/05/2026) மதியம் எம் கே சிவாஜிலிங்கம்  (M.K Sivajilinkam
 Ac no:774688 ,Bank of Ceylon ,saving account Bambalapitiya branch )ஊடாக அவருடைய வங்கிகணக்கில் ஒரு மில்லியன் (10, இலட்சம்)
ரூபாவை வைப்பிலுட்டதாக எனக்கு தற்போது அறியத்தந்தார்.

மதிப்புக்குரிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களுக்கு மனதார பாராட்டுக்களும். நன்றியும்.

-பா.அரியநேத்திரன்
22/05/2026
புதியது பழையவை