மட்டக்களப்பு போரதீவுப்பற்று கண்ணபுரத்தில் "இளவேனில் கால குதூகலம் 2026" கலாசார விழா!

​மட்டக்களப்பு மாவட்டம்,
போரதீவுப்பற்று, 35ஆம் கிராமம் கண்ணபுரம் கிழக்கு சிவசக்தி இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில், "இளவேனில் கால குதூகலம்" கலாசார விளையாட்டு விழாவும் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று முன் (07.06.2026) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கண்ணன் வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

​நிகழ்வுக்கு வருகை தந்த போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேசசபையின் உப தவிசாளர் த. கயசீலன், உதவி பிரதேச செயலாளர் வி. கமல்ராஜ் உள்ளிட்ட அதிதிகளுக்கு இளைஞர் கழகத்தினால் பொன்னாடை போர்த்தி  கௌரவிப்பு செய்யப்பட்டது.

​கிராமிய கலாசார கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகள் வெகுவிமர்சையாக இடம்பெற்றன.
கல்விச் சாதனையாளர்கள் அதிதிகளால் கௌரவிக்கப்பட்டதோடு, விளையாட்டுக் கழக உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டைகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.

​இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் தெ.தயாளன், இளைஞர்கழக உத்தியோகஸ்தர் த.விந்தியன்,கலாசார உத்தியோகஸ்தர் த.பிரபாகரன்,கிராம உத்தியோகஸ்தர்,அரச உத்தியோகத்தர்கள், கழக உறுப்பினர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
புதியது பழையவை