இந்தியாவின் அகமதாபாத் நகரில் நடைபெற்ற உலக யோகாசனப் போட்டியில், இலங்கையின் மட்டக்களப்பைச் சேர்ந்த 15 வயது இளம் வீராங்கனை துவேஷா ரமேஷ் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச ரீதியிலான கடுமையான சவால்களுக்கு மத்தியில் திறமையை வெளிப்படுத்திய அவர், 1 வெள்ளிப் பதக்கத்தையும் 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றி இலங்கைக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
உலகத் தரம் வாய்ந்த அரங்கில் இந்த வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திய இளம் வீராங்கனைக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.