மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த புதிய வீடொன்றில் தூண் இடிந்து விழுந்ததில், 28 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (29.07.2026) ஆம் திகதி பிற்பகல், காத்தான்குடி நூராணிய்யா மையவாடி முதலாம் குறுக்கு வீதியில் இடம்பெற்று வந்த வீட்டின் கட்டுமானப் பணியின்போதே இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் மட்டக்களப்பு, ஜெயந்திபுரம் யாட் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் என பொலிஸாரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.