ஸ்பெயினில் 121 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்வரும் (12.08.2026)ஆம் திகதி அரிய முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளதாக நாசா (NASA) அமைப்பை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 1905-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஸ்பெயினில் தென்படவுள்ள இந்த முழு சூரிய கிரகணத்தை, ஸ்பெயின் தவிர்த்து கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, ரஷ்யா மற்றும் போர்த்துக்கல்லின் சில பகுதிகளிலும் முழுமையாகவோ அல்லது பகுதியளவிலோ காண முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியனை நிலவு முழுமையாக மறைக்கும் இந்த அரிய வானியல் நிகழ்வு, உலகெங்கிலும் உள்ள வானியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த 2024-ஆம் ஆண்டு அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட வட அமெரிக்கப் பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தென்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.