மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பகுதியில், புழுக்கள் மற்றும் பூஞ்சணம் பிடித்த நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பிஸ்கட் பொதிகள் பொது சுகாதார பரிசோதகர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.
களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த. கஜனன் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போதே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியமைக்காக உற்பத்தியாளருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம், அவருக்கு 46 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், குறித்த பிஸ்கட் தொகுதியின் (Batch Number) அதே தொகுதி இலக்கத்தைக் கொண்ட அனைத்து பிஸ்கட் பொதிகளையும் சந்தையிலிருந்து உடனடியாக மீளப்பெற்று அழிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போது அவற்றின் தரம், உற்பத்தி மற்றும் காலாவதி திகதிகளைக் கவனமாகப் பரிசீலித்து விழிப்புடன் செயற்படுமாறு பொது சுகாதார பரிசோதகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.