திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உவர்மலை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய அதிகாரிகளால் குறித்த விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடுதி பொறுப்பாளர் உட்பட மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் என நான்கு பேர் கைது செய்யப்பட்டு, தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 48, 38 மற்றும் 43 வயதுடைய மூன்று பெண்களும், 54 வயதுடைய ஆண் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை இரண்டு நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.