கிழக்கில் 5 பேர் கொலை வழக்கில் பிள்ளையானின் விளக்கமறியல் செப்டம்பர் 29 வரை நீடிப்பு!

​கிழக்கு மாகாணத்தில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

​இன்று (15.09.2026) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

​இக்கொலை வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் வழங்கிவந்த இருவரும் உட்பட மூன்று சந்தேகநபர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை