மட்டக்களப்பு உன்னிச்சையில் சோகம்- கால்வாய் மடுவில் விழுந்து 6 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு!

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உன்னிச்சை 6ம் கட்டை பகுதியில், வீதி மற்றும் கால்வாய் புனரமைப்புப் பணிகளுக்காக வெட்டப்பட்ட மடுவில் விழுந்து 6 வயதுச் சிறுவன் ஒருவன் இன்று (04.09.2026) பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

​மட்/மமே/ உன்னிச்சை 6ம் கட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 1ஆம் தரத்தில் கல்வி கற்றுவந்த நாகராசா நவதீவ் என்ற 6 வயதுச் சிறுவனே இச்சம்பவத்தில் உயிரிழந்தவனாவான்.

​சிறுவனின் தாயார் கொள்ளி வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையிலேயே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

கால்வாய் அமைப்பதற்காக வெட்டப்பட்ட குழியில் நீர் நிறைந்திருந்த நிலையில், அதில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளான்.

​குறித்த வடிகான் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டவர்கள், ஆபத்தான அம் மடுவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தால் இந்த அப்பாவிச் சிறுவனின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என அப்பகுதி மக்கள் கவலையுடனும் ஆத்திரத்துடனும் தெரிவிக்கின்றனர். 

அலட்சியப் போக்கால் நிகழ்ந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
​உயிரிழந்த சிறுவன் நவதீவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
புதியது பழையவை