வைத்தியசாலையில் எரிவாயு உருளை வெடிப்பு - 7 பேர் படுகாயம்,கட்டிடமும் பலத்த சேதம்!

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறையில் இன்று (26.09.2026) ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற திடீர் எரிவாயு உருளை வெடிப்புச் சம்பவத்தில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளதுடன், வைத்தியசாலைக் கட்டிடமும் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​இன்று காலை வைத்தியசாலையின் சமையலறையில் இருந்த எரிவாயு உருளை (Gas Cylinder) எதிர்பாராதவிதமாக வெடித்துச் சிதறியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்த அனைவரும் வைத்தியசாலையின் ஊழியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் அனைவரும் உடனடியாக மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

​இந்த வெடிப்புச் சம்பவத்தின் தாக்கம் காரணமாக வைத்தியசாலையின் சமையலறைப் பகுதி உள்ளிட்ட கட்டிடப் பிரிவுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.

​சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளின்படி எரிவாயு உருளை வெடித்ததே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், விபத்துக்கான துல்லியமான காரணம் குறித்து பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
புதியது பழையவை