அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி லங்கா ஸ்டோருக்கு அருகாமையில் உள்ள LU LU நிறுவனத்தின் மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அதனுடைய மேல்தளத்தில் இன்று(12.09.2026)தீப்பரவல் இடம் பெற்றது.
இதனை அடுத்து அக்கரைப்பற்று மாநகர சபையின் தீ அணைப்பு பிரிவு விரைந்து தீயினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது அங்கு குழுமி இருந்தவர்களும் அருகில் உள்ள நிறுவன உரிமையாளர்களும் அக்கரைப்பற்று மாநகர சபைக்கும் தீயணைப்பு பிரிவுக்கும் இதனை அக்கரைப்பற்றுக்கு கொண்டு வந்த முன்னால் அமைச்சரும் இன்னால் மாநகர சபை முதல் வரும் ஏ.எல்.எம் அதாஉல்லா வுக்கு நன்றிகளை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.