கிழக்கு இலங்கையின் புகழ்பூத்த, வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குருக்கள் சோதிலிங்க குருக்கள் இன்று (11.09.2026) இறைவனடி சேர்ந்தார் (சிவபதம் எய்தினார்).
நீண்டகாலமாக தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நித்திய நைமித்திய பூசைகளை முறைப்படி நடாத்தி, பக்தி நெறியையும் ஆன்மீகப் பணியையும் செவ்வனே ஆற்றிவந்த அன்னாரின் மறைவு செய்தி கேட்டு அப்பகுதி அடியார்களிடையேயும் ஆன்மீக உலகிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவபெருமானின் திருவருள் பெற்ற அன்னாரின் ஆத்மா சிவலோகப் பேறடைந்து, இறைவனின் திருவடி நிழலில் என்றும் சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போம்.
ஓம் நமசிவாய! ஓம் சாந்தி சாந்தி சாந்தி...