அம்பாறை மாவட்டம் நிந்தவூர் - அட்டப்பளம் தேநீர்க்கடைக்கு அருகில் இன்று (11.09.2026) அதிகாலை வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்கள் பயணித்த வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.