திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபரின் சிறுநீரகத்திலிருந்து அண்மையில்(14.08.2026)ஆம் திகதி சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட 3 கிலோ 100 கிராம் எடையுள்ள மிக நீளமான சிறுநீரகக் கல்லை ஜனாதிபதி இன்று (17.09.2026)ஆம் திகதி நேரில் பார்வையிட்டார்.
வைத்தியர்களின் இந்த அரிய சாதனை மற்றும் சத்திர சிகிச்சையின் வெற்றிகரமான செயல்பாடு குறித்து ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.