மின்சாரம் தாக்கி இளம் தாய் உயிரிழப்பு.!

பிபிலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோதம்வள்ளை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில், மின்சாரம் தாக்கி மூன்று பிள்ளைகளின் தாய் ஞாயிற்றுக்கிழமை (06) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

 உயிரிழந்தவர் தோதம்வள்ளை ஈதனவத்தையைச் சேர்ந்த பிரசந்திகா மதுமாலி (30) எனப்படும் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

வீட்டில் மின்விளக்கு ஒன்றை மின்னேற்றம் (சார்ஜ்) செய்வதற்காக,  சார்ஜரை சுவிட்சில் இணைக்க முற்பட்டவேளை மின்சாரம் தாக்கியுள்ளது.

இதனையடுத்து , பிபிலை முஸ்தபா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் முன்பே அவர் உயிரிழந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணம் தொடர்பில் பிபிலை பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ். ஜகத் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.
புதியது பழையவை