நேற்றையதினம் (14.09.2026)முழுமுதல் கடவுளாம் விநாயககடவுள் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றது. அந்தவகையில் ஆலயங்கள் தோறும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அபிசீக ஆராதனைகள் இடம்பெற்றது.
விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆலயத் திருவிழாக்கள் என்பது இறைவனின் அருளைப் பெற்று மன அமைதி அடையும் ஆன்மீக நன்னாளாகும்.
இன்னிலையில் களுதாவளை கல்லடி பிள்ளையார் ஆலயத்தின் வீதியில், விநாயகப் பெருமானின் திருமுன்னே ஒரு யானை முழந்தாளிட்டுத் தன் தும்பிக்கையை உயர்த்தி வணங்கிய காட்சி, காண்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.