மட்டக்களப்பு, இருதயபுரம் பகுதியில் வீதியோரத்தில் மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றை வேனில் கடத்திச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த நபர் ஒருவர், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேனுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 18ஆம் திகதி இருதயபுரம் பகுதியில் வீதியோரம் மேய்ந்துகொண்டிருந்த ஆடு ஒன்றை குறித்த நபர் வேனில் கடத்திச் சென்றுள்ளார். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்றைய தினம் (01.09.2026) மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பொலிஸாரின் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.