பாடசாலை மாணவியிடம் தகாத காணொளி காண்பித்த ஆசிரியர் கைது.!

​தலவாக்கலை பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் வகுப்பறைக்குள் மாணவியொருவருக்குத் தகாத காணொளிகளைக் காட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

​இச்சம்பவம் குறித்து அம்மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (25.09.2026) தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அம்முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை மேற்கொண்ட தலவாக்கலை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்தனர்.

​கைது செய்யப்பட்ட ஆசிரியர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை