சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தியும், அவருக்காக பிரார்த்தனை மேற்கொள்ளும் வகையிலும் அம்பாறை மாவட்ட அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமான ஒன்றுகூடல் இன்று (23.09.2026) ஆம் திகதி புதன்கிழமை காலை ஆலையடிவேம்பு அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்ற முன்றலில் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்களின் பிரதிநிதிகள், இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் ஒன்றுகூடி அனோஜனின் விடுதலைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அத்துடன், அனோஜனுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பலரும் உரையாற்றினர்.
அனோஜனின் விடுதலைக்கான முயற்சிகளுக்கு சமூக மட்டத்தில் தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்பட வேண்டுமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.