மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கற்சேனை முல்லை வீதியைச் சேர்ந்த நந்தகோபன் கிசோத் (2 வயதும் 8 மாதங்களும்) சென்ற சிறுவன் வாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நேற்று (01.09.2026)ஆம் திகதி காலை 10.30 மணியளவில், வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே சிறுவன் விளையாடிக் ப கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்ததில் நீரில் மூழ்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக உறவினர்கள் சிறுவனை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும், வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு
மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றின் கட்டளைக்கு அமைவாக
திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன், பழுகாமம் வைத்தியசாலைக்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதுடன், சம்பவம் இடம்பெற்ற இடத்தினையும் பார்வையிட்டு உறவினர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்தார்.
அதன்பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ச சடலம் நேற்று (01.09.2026) மாலை பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேலதிக தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.