பாடசாலையிலிருந்து மகளை அழைத்து வந்த தந்தை ரயிலுடன் மோதி பரிதாப உயிரிழப்பு.! மகள் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி!

யாழ்ப்பாணம், அரியாலை - புங்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவையில் இன்று (23.09.2026) ஆம் திகதி இடம்பெற்ற கொடூர விபத்தில் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன், அவரது மகள் படுகாயமடைந்துள்ளார்.

​பாடசாலையிலிருந்து தனது மகளை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதே, எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.

​இவ்விபத்தில் படுகாயமடைந்த பாடசாலை மாணவியான மகள், உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
புதியது பழையவை