படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 26ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நேற்று (20.10.2026) ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு முன்பாக அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் இந்நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் மற்றும் உண்மைகளை வெளிக்கொணரும் ஊடகப் பணியின் முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் இந்நினைவேந்தல் நிகழ்வு அமைந்தது.