மட்டக்களப்பு நகரில் ஒரே நாளில் 8 பேரைக் கடித்த குரங்கு!

மட்டக்களப்பில் அதிகரிக்கும் குரங்குத் தொல்லை; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
மட்டக்களப்பு நகரப் பகுதியில் ஒரே நாளில் குரங்கு ஒன்று 8 பேரைக் கடித்துக் காயப்படுத்திய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் நகரப் பகுதிகளில் அண்மைக்காலமாகக் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது. நகருக்குள் புகும் குரங்குகள், மக்கள் குடியிருக்கும் வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களைச் சேதப்படுத்துவதுடன், பல்வேறு அட்டகாசங்களிலும் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நேற்று (24.10.2026) மட்டக்களப்பு நகருக்குள் புகுந்த குரங்கு ஒன்று, நேற்று முதல் இன்று (25.10.2026) வரை 8 பேரைக் கடித்துக் காயப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குரங்குக் கடிக்கு இலக்கான எட்டுப் பேரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் குரங்குகள் மற்றும் காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, சிறு குழந்தைகளை உடைய குடும்பத்தினர் கூடுதல் கவனத்துடன் இருக்குமாறும், குரங்குகள் வீடுகளுக்குள் நுழைவதைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
புதியது பழையவை