எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு.!

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து, IOCயும் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.

அதன்படி, அந்நிறுவனமும் இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் உயர்த்திய விலைகளுக்கு இணையாகத் தனது எரிபொருள் விலைகளையும் உயர்த்தியுள்ளது.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (30.09.2026) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது. 

அதன்படி, ஒரு லிட்டர் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை ரூபா 15 உயர்த்தப்பட்டு, புதிய விலை ரூபா 414 ஆக உள்ளது.

இருப்பினும், ஒரு லிட்டர் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் இருக்காது, அதன் விலை தற்போதைய ரூபா 475 என்ற விலையிலேயே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், ஒரு லிட்டர் சூப்பர் டீசலின் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், அதன்படி 478 ரூபாவாக இருந்த விலை 528 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு லிட்டர் சுப்பர் டீசலின் விலை 382 ரூபாவாக இருந்த நிலையில், 10 ரூபா உயர்த்தப்பட்டு, அதன் புதிய விலை 392 ரூபாவாக உள்ளது.

இதற்கிடையில், 285 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்படாமல் அதே விலையில் நீடிக்கிறது.
புதியது பழையவை