மருதமுனை கடற்கரையில் முதியவர் சடலமாக மீட்பு.!

அம்பாறை மாவட்டம், மருதமுனை கடற்கரை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (09.10.2026) ஆம் திகதி 69 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

​இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பாண்டிருப்பு – 02, கிருஷ்ணா வீதியைச் சேர்ந்த கிருபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

​இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

புதியது பழையவை