இலங்கையின் தேசிய கல்வி நாட்காட்டிக்கு அமைவாகவும், அரச சுற்றுநிருபத்திற்கு இணங்கவும் ஆண்டுதோறும் அக்டோபர் 6 ஆம் திகதி தேசிய ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகா வித்யாலயத்தில் இவ்வாண்டிற்கான தேசிய ஆசிரியர் தின விழா இன்று (06.10.2026)ஆம் திகதி வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
பாடசாலையின் தற்போதைய மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, பாடசாலையின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தில் காலை வேளையில் சிறப்புடன் ஆரம்பமானது.
நிகழ்வின் முக்கிய அம்சமாக, பாடசாலையின் அதிபர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவையை பாராட்டி, மாணவர்களால் மாலை அணிவித்து சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.
பாடசாலைச் சமூகத்தின் இந்த நெகிழ்ச்சியான வரவேற்பும் கௌரவிப்பும், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்த மகத்தான அங்கீகாரமாக அமைந்ததோடு, விழாவில் கலந்துகொண்ட அனைவரின் மனங்களையும் நெகிழ வைத்தது.