ஷிரந்தி ராஜபக்ஷ பிணையில் விடுதலை! மருத்துவ அறிக்கையைக் கருத்திற்கொண்டு நீதிமன்றம் உத்தரவு.!

தேசிய சேமிப்பு வங்கியின் நிதியிலிருந்து ‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு 10 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

​சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு உடனடியாக இதய சத்திர சிகிச்சை (Bypass Surgery) மேற்கொள்ள வேண்டுமென கொழும்பு தேசிய வைத்தியசாலை நீதிமன்றத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

​இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் அவரது மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்ட நீதவான் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.
​இதற்கமைய, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 100 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் அவரை விடுவிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதியது பழையவை