வவுனியா ஓமந்தையில் கார் விபத்து: சிறுவன் உட்பட மூவர் காயம்!

வவுனியா, ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ஏ9 வீதியில் இன்று திங்கட்கிழமை (12.10.2026) காலை இடம்பெற்ற கார் விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

​கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கார் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
​விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை