இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு மகிழூர் மேனரூபன் தெரிவு.!

மட்டக்களப்பு மகிழூர் கிராமத்தைச் சேர்ந்த நாகரெத்தினம் மேனரூபன் இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில்  அமைந்துள்ள  மகிழுர் கிராமத்தைச் சேர்ந்த நாகரெத்தினம் யோகநாயகி தம்பதிகளின்  ஏக புத்திரனான மேனரூபன் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை மகிழுர் சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று 2006 இல்  முதல் தரத்திலே கலைப்பிரிவில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.  

2010 ஆம் ஆண்டு கலைப்பட்டதாரியாக வெளியேறியவர். 
2013 ஆம் ஆண்டு அபிவிருத்தி உத்தியோகத்தராக அரச சேவையில் உள் நுழைந்தார்.  திருகோணமலை மாகாண விவசாய திணைக்களம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், தும்பங்கேணி அரச கால் நடைப்பண்ணை, ஆரையம்பதி அரச கால் நடை வைத்திய அலுவலகம் ஆகியவற்றில் கடமையாற்றியவர் தற்போது களுவாஞ்சிகுடி பட்டிருப்பு வலயக்கல்விப் பணிமனையில் கடமைபுரிந்து வருகின்றார். 

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற  இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை  திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததோடு மட்டுமல்லாமல் நேர்முகப்பரீட்சையிலும் சித்தியடைந்து இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் 09 ஆம் திகதி இவருக்கான நியமனம் வழங்கப்படவுள்ளது. 

பிரபல சமூக செயற்பாட்டாளராகவும் நன்கு அறியப்பட்ட இவர் அகில இலங்கை சமாதானநீதவானாகவும், களுவாஞ்சிகுடி மத்தியஸ்த சபையின் மத்தியஸ்தராகவும், மகிழுர் கண்ணகி அம்மன் ஆலய பொருளாளர் மற்றும் பொதுநல அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் செயற்பட்டு வருகின்றார். 

தற்போது எருவில் கிராமத்தில் திருமணம் முடித்து வசித்து வரும் இவரது மனைவி டீற்றா பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக சேவையாற்றி வருகின்றார் என்பதோடு கோகிஷன், சுவத்மிகா ஆகிய இரு பிள்ளைகளும் இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை