திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று, இன்று (11.10.2026) அதிகாலை சுமார் 1.00 மணியளவில் கந்தளாய் – ஹபரணை பிரதான வீதியின் அலுத் ஓயா பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
பயணிகளுடன் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த விபத்துக்கான உரிய காரணம் மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த மேலதிக விபரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் விசாரணைகளின் விவரங்கள் கிடைத்தவுடன் உடனடியாகத் தொடர்ந்து பதிவேற்றப்படும்.