திருகோணமலையில் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

திருகோணமலை பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று மாலை மற்றுமொரு பஸ் விபத்து இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ் ஒன்று, பயணிகளை இறக்கிவிட்டு திரும்புவதற்கு முற்பட்ட போது, பஸ்ஸுக்கு முன்னால் வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியுள்ளது.

காயமடைந்த பாதசாரி திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புதியது பழையவை