இந்தோனேஷியாவின் சும்பாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை இல்லை!

இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbawa) தீவுப் பகுதியில் இன்று (அக்டோபர் 04) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  

ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் (GFZ) தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவாகியுள்ளது. இது பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் (6.21 மைல்கள்) ஆழத்தில் உருவாகியுள்ளது.  

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை உடனடி உயிரிழப்புகளோ அல்லது பாரிய பொருள் சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.  

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேஷியா, புவியியல் ரீதியாக பசிபிக் Ocean "நெருப்பு வளையத்தில்" (Pacific Ring of Fire) அமைந்துள்ளதால், இங்கு அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.
புதியது பழையவை