மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை)பிரதேசசபைக்கு முன்பாக இன்று (14.10.2026) ஆம் திகதி பிற்பகலில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
வீதி ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டுச் சாரதி கடைக்குச் சென்றவேளை, திடீரென வாகனம் சாரதியின் கட்டுப்பாடின்றி நகர்ந்து வீதியோரமாக உள்ள வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் குறித்த வாகனத்திற்குச் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த விபத்தானது முழுக்க முழுக்க சாரதியின் கவனயீனம் காரணமாகவே இடம்பெற்றுள்ளதாகப் பிரதேசவாசிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
வாகனங்களை வீதியோரம் தரித்து நிற்கும்போதும், கைப்பிரேக் (Handbrake) மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள்வதிலும் சாரதிகள் அதிக அவதானத்துடன் செயற்படுமாறு இச்சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.