அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பில் விபத்து! மாடு மோதியதில் முச்சக்கர வண்டி சேதம்,ஒருவர் காயம்!

​அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பிரதான வீதியின் பள்ளிக்குடியிருப்பு பகுதியில் இன்று (16.10.2026) மாடு மோதியதில் முச்சக்கர வண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

​வீதியைக் கடக்க முயன்ற மாடு, எதிர்பாராத விதமாக வேகமாக வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்தில் முச்சக்கர வண்டியின் முன்பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன், அதில் பயணித்த ஒருவரும் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

​விபத்தில் காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாகன சாரதிகளின் கவனத்திற்கு:
தற்போது பிரதான வீதிகளில் கால்நடைகள் திடீரென குறுக்கிடும் அபாயம் அதிகரித்து வருவதால், சாரதிகள் அனைவரும் அவதானத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாகனங்களைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

​இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விசாரணைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
புதியது பழையவை