சிவாஜிலிங்கம் அதிதீவிரசிகிச்சைப் பிரிவில்..!

தமிழ்த்தேசிய அரசியல் தலைவரும்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் மந்திகை மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சிவாஜிலிங்கத்தின் இரண்டு சிறுநீரகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஜூன்  மாதம்-11 ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிறுநீரக மாற்றுச் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சில வாரங்களாக அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் வீடு திரும்பியிருந்தார். இந் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்துக் கடந்த மாதம்-24 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள  தனியார் மருத்துவமனையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுச் சிகிச்சை பெற்றார்.      

இதன்பின்னர்  (02.11.2026)திங்கட்கிழமை சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை திடீரென மீண்டும் மிகவும் மோசமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புதியது பழையவை