மருதமுனை – நீலாவனை பகுதியில் நேற்று இரவு (11.11.2026)அதிசொகுசு பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து மருதமுனை நீலாவனை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.