மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்திய கலாநிதி குணசிங்கம் சுகுணன் இன்று (04.11.2026) புதன்கிழமை உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி, மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், வைத்திய கலாநிதி தி. திருக்குமரன் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர்.