இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவனை, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் இன்று (21.11.2026)ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள், தமது நிலைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கப் பிரதிநிதிகள் அண்மையில் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி உறவினர்கள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.