பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் தேவஸ்தானத்தில் கேதார கௌரி விரத நிறைவு நிகழ்வு.!

இந்துக்களின் முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதத்தின் நிறைவு நிகழ்வையொட்டி, அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் தேவஸ்தானத்தில்  இன்று (08) ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

கடந்த மாதம் 20.10.2026 அன்று ஆரம்பமான இவ்விரதத்தை, அடியார்கள் கடந்த 20 நாட்களாக ஒருவேளை உணவை மட்டும் உட்கொண்டு சிவபெருமானை நினைத்து அனுஷ்டித்து வந்தனர். இதேவேளை, கேதார கௌரி விரதத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்திலுள்ள பல ஆலயங்களிலும் விசேட பூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் தேவஸ்தானத்தில்  கேதார கௌரி விரத நிறைவு நிகழ்வ
விரதத்தின் இறுதி நிகழ்வையொட்டி இன்று அடியார்கள் உபவாசமிருந்து இறைவனை வழிபட்டு காப்புக்கட்டிக்கொண்டனர்.

இதன்போது ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள் தலைமையில் அபிஷேகங்கள் மற்றும் விசேட பூஜைகள் இடம்பெற்றன. அத்துடன், தீபாவளித் திருநாளை முன்னிட்டு சுமங்கலிப் பெண்களின் விளக்குப் பூஜையும் நடைபெற்றது.

இம்முறை பனங்காடு ஸ்ரீ பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் 630 இற்கும் மேற்பட்டோர் கேதார கௌரி விரதத்தை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.
புதியது பழையவை