கொழும்பு மாவட்டம், பாதுக்கைப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 20 வயதுடைய யுவதி ஒருவர், தனது அறையில் அசைவற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறித்த யுவதியின் பெற்றோர் வங்கித் தேவைக்காக மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளனர்.
பின்னர் வீடு திரும்பியபோது, மகள் படுக்கையில் அசைவற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து, பெற்றோர் உடனடியாக யுவதியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.