தொல்பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக மேலும் ஐந்து உறுப்பினர்கள் நியமனம்!!

 


கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு புதிதாக மேலும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கபட்டுள்ளன.


இதன்படி, புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அநுர மானதுங்க, காணி ஆணையாளர் கீர்த்தி கமகே, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர மற்றும் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அசிங்சலா செனவிரத்ன ஆகியோர் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.


இது தொடர்பில் ஜனாதிபதி செயலாளரினால் விசேட வர்த்தமானி ஊடாக அந்த விடயம் அறிவிக்கபட்டுள்ளது.


கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இருந்த ஐந்து பேர் ஓய்வு பெற்றமை மற்றும் இடம்மாற்றம் பெற்றமை காரணமாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த வருடம் ஜுன் மாதம் கிழக்கு மாகாண தொல்பொருள் முகாமைத்துவம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.


16 உறுப்பினர்களை கொண்ட இந்த ஜனாதிபதி செயலணியானது பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில் செயற்ப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதியது பழையவை