புலிகளின் முஸ்லிம் மாவீரர் பிறந்த அதே மண்ணில் முஸ்லிம் பெண்களின் எழுச்சி!

வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுள தமிழ் மக்களின் மாபெரும் உரிமைப்போராட்டத்துடன் இன்றைய இரண்டாம் நாளிலும் பல்லாயிரம் மக்கள் கலந்துகொண்டு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் நேற்றைய தினம் ஆரம்பித்த இந்த நடைபவனிப் போராட்டம் நேற்றிரவு தாழங்குடாவை சென்றடைந்து முதல் நாளை முடிவுக்குக் கொண்டுவந்தது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை தாழங்குடாவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் போராட்டம் திருகோணமலை நோக்கிச் சென்றது.

இதனிடையே இன்றைய போராட்டத்திலும் கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்கள் பலரும் தமது ஆதரவினைத் தெரிவிக்குமுகமாக கோராட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.

குறிப்பாக காத்தான்குடி ஓட்டமாவடி ஏறாவூர் போன்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

ஓட்டமாவடியில் முஸ்லிம் பெண்கள் பலரும் தமிழரது போராட்டத்தோடு இரண்டறக்கலந்து தமது ஆதரவுக் கரங்களை நீட்டினர்.

ஈழப் போராட்டங்களில் ஆரம்பத்தில் முஸ்லிம் மக்களின் பங்களிப்பு என்பதும் அளப்பரியதாக இருந்தது எனலாம். குறிப்பாக ‘தமிழீழ விடுதலை நாகங்கள்’ எனும் விடுதலை இயக்கத்தை ஆரம்பித்து இலங்கை ஆயுதப்படைகள்மீது தாக்குதலை நடத்திவந்த ஜூனைதீன் என்பவர் விடுதலைப்புலிகளின் முதலாவது முஸ்லிம் மாவீரராவார்.

லெப்டினண்ட் ஜோன்ஸன் என விடுதலைபுலிகளின் இயக்கப்பெயரை இயக்கப்பெயரைச் சூடிக்கொண்ட இவர் விடுதலைப்புலிகளின் தலைவரது நம்பிக்கைக்குரிய மூத்த உறுப்பினராக இருந்தார். அதுமட்டுமன்றி தனது இயக்கத்தைச் சேர்ந்த அத்தனை முஸ்ளிம் போராளிகளையும் விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜூனைதீன் பிறந்தது ஓட்டமாவடி ஆகும். தனது இறப்புவரை விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்து மிகுந்த விசுவாசமிக்க ஒருவராக போராடிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







புதியது பழையவை