அம்பாறையில் இராணுவத்தினருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்குமிடையே இன்று தம்பிலுவில் பிரதேசத்தில் அமைந்துள்ள சோதனைச்சாவடியில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மக்களை சந்திக்க சென்ற வேளை சோதனைச்சாவடியில் நின்ற இராணுவத்தினர் வாகனத்தை சூழ்ந்து தகாத முறையில் நடந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இவ்வாறான அராஜக போக்கினை காட்டுகின்றனர் என்றால் சாதாரண மக்களுக்கு எவ்வாறான நெடுக்கடியினை கொடுக்கும் என்பதனை சர்வதேசம் புரிந்துகொள்ள வேண்டும்.
பிரதான வீதியில் வாகனத்தை நிறுத்தி அவமதிக்கும் நோக்கோடு வாகனத்திலிருந்து இறங்குமாறு சத்தமிட்டனர். இதனை தொடர்ந்து வாகனத்தை சோதனையிட்ட போது முறுகல் ஏற்பட்டது.
நாளைய பேரணிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பதாகைகள், துணிகள் ஏதும் உள்ளதா என்றும், திருக்கோவில் பிரதேசத்திற்கு செல்ல முடியாது என இராணுவத்தினர் கூறியவேளை முறுகல் நிலை தோன்றியது என்றும் தெரிவித்துள்ளார்.